பதிவு செய்த நாள்
08 ஜன2021
21:52

மும்பை:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் வீட்டுக்கடனுக்கான வட்டியில், 0.30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக, அறிவித்துள்ளது. மேலும், வீட்டுக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தையும், 100 சதவீதம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் அறிவிக்கப்பட்டு உள்ளதாவது: வீட்டுக் கடனுக்கான வட்டியில், 0.30 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான புதிய வீட்டுக்கடனுக்கான வட்டி, 6.80 சதவீதமாகும். 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடனுக்கு, வட்டி, 6.95 சதவீதமாக இருக்கும்.
மேலும், வீட்டுக் கடன் பெறும் மகளிருக்கு, வட்டியில், 0.05 சதவீதம் சலுகையும் வழங்கப் படும். நாட்டில் உள்ள எட்டு மிகப் பெரிய நகரங்களில், 5 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டியிலும், 0.30 சதவீத தள்ளுபடி கிடைக்கும். மேலும், வங்கியின், ‘யோனோ’ செயலி மூலமாக வீட்டுக்கடன் கோருபவர்களுக்கு கூடுதலாக, 0.05 சதவீத வட்டி சலுகை கிடைக்கும்.தகுதிவாய்ந்த, ஏற்கனவே வீட்டுக்கடன் பெற்றவர்களும், ‘யோனோ’ செயலி மூலம் கடனை, அதிகரித்துக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|