பதிவு செய்த நாள்
08 ஜன2021
21:54

சென்னை:டி.எம்.டி., கம்பிகள் விலை, 80 சதவீதமும், சிமென்ட் விலை, 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு, தனியார் கட்டுமான திட்டங்கள் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கமான, பி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இச்சங்கத்தின் மாநில தலைவர் ஆர். பிரகாஷ் கூறியதாவது:ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பின், டி.எம்.டி., கம்பிகள் விலை, 80 சதவீதமும்; சிமென்ட் விலை, 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால், தனி நபர்கள் வீடு கட்டுவது, வீடு வாங்குவது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கான கட்டுமான பணிகளும் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, விலை உயர்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வீடு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில், முத்திரை கட்டணம் குறைப்பு, மின்சார இணைப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|