பதிவு செய்த நாள்
10 ஜன2021
01:49

புதுடில்லி:அனில் அம்பானியின் தலைமையிலான, ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான, ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் கடன் பாக்கி, 20 ஆயிரத்து, 380 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளதாவது:ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் கடன் பாக்கி, கடந்த, 2020ம் ஆண்டில், டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, 20 ஆயிரத்து, 380 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய, 2019ம் ஆண்டில், வட்டி உட்பட, மொத்த கடன் பாக்கி, 19 ஆயிரத்து, 806 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு, வட்டியுடன் செலுத்த வேண்டிய பாக்கி தொகை, 701 கோடி ரூபாய். இதில், எச்.டி.எப்.சி., வங்கிக்கு, வட்டியை சேர்க்காமல் கட்ட வேண்டிய கடன் தொகை, 524 கோடி ரூபாய். ஆக்சிஸ் வங்கிக்கு செலுத்த வேண்டியது, 101 கோடி ரூபாய்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|