பதிவு செய்த நாள்
10 ஜன2021
01:53
புதுடில்லி:டெக்மகிந்திரா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததை அடுத்து, சந்தை மதிப்பும் அதிகரித்துள்ளது.
தற்போது, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1.02 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதையடுத்து, இந்தியாவில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சந்தை மதிப்பு கொண்ட, ஐந்தாவது நிறுவனமாக உயர்ந்துள்ளது.டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், எச்.சி.எல்., மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சந்தை மதிப்புடன் உள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், சந்தை மதிப்பின் அடிப்படையில், ‘டாப் – 100’ல், 33வது இடத்தை டெக்மகிந்திரா வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.சந்தை மதிப்பில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 12.25 லட்சம் கோடி ரூபாயுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 11.71 லட்சம் கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில், டி.சி.எஸ்., நிறுவனம் உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|