உலக கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இந்திய நிறுவனம் உலக கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இந்திய நிறுவனம் ...  உலக பட்டியலில் 11இந்திய நிறுவனங்கள் உலக பட்டியலில் 11இந்திய நிறுவனங்கள் ...
வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2021
22:01

புதுடில்லி:வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, பிப்ரவரி, 15ம் தேதிக்கும் மேல் நீட்டிக்க மத்திய நிதியமைச்சகம் மறுத்துவிட்டது.

தணிக்கை தேவைப்படக்கூடிய, தனிநபர்களுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி, பிப்ரவரி 15. இந்நிலையில், இதை நீட்டிக்க கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மத்திய நிதியமைச்சகம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், தனிநபர்களுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜன., 10ம் தேதி என்றும், நிறுவனங்களுக்கு, பிப்., 15ம் தேதி என்றும் நீட்டித்து அறிவித்தது.மேலும், தணிக்கை தேவைப்படும் தாக்கல்களுக்கு, கடைசி தேதி, பிப்., 15 என்றும் அறிவித்தது. இதற்கு முன், கடந்த ஆண்டு, டிச., 31ம் தேதி கடைசி நாளாக இருந்தது.

இந்நிலையில், பிப்., 15ம் தேதி என்பதை மேலும் நீட்டிக்குமாறு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மத்திய நிதியமைச்சகம் மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது என்று, அவர்களது கோரிக்கையை நிராகரித்து அறிவித்துள்ளது.5 சதவீதம் அதிகம்கடந்த, 2019 – 20 நிதியாண்டுக்கான, வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த, 10ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம், 5.95 கோடி பேர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள் எண்ணிக்கை, 5.67 கோடி என, வருமான வரி துறை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் ... மேலும்
business news
இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய ... மேலும்
business news
வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
SENTHIL - tirumalai,India
14-ஜன-202120:09:43 IST Report Abuse
SENTHIL எல்லாம் சரி தான் என இருந்தோம், சில கட்டுப்பாடுகள் தேவை தான் என பல்லை கடித்துக்கொண்டு இருந்தோம், இருப்பினும் தற்போது வருமானவரி மற்றும் ஜி எஸ் டி படிவங்கள் தாக்கல் செய்வதில், கொரோன சுமைகளை மீறி வரி செலுத்துவோரின் நிலையை கருத்தில் கொள்ளாமல், தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்ய மறுப்பதும், மேலும் கோடி கணக்கான பணத்தை கால தாமத கட்டண சுமையாக வரி செலுத்துவோர் மீது வைக்க நினைக்கும் உங்கள் நிர்வாகம் பல்வேறு சந்தேகங்களை வரி செலுத்துவோர் மனங்களில் ஏற்படுத்துகிறது. எத்தனையோ முறைகளில் இதை எடுத்து சொல்லியும் கேட்பர் இல்லை. இவைதான் நீங்கள் சொல்லும் "எளிய தொழில் செய்ய ஊக்குவிக்கும் முறைகலா" என கேட்க தோன்றுகிறது. கோவிட் காலகட்டத்தில் இந்த கண்டிப்பு மிகவும் வருத்தமாக உள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)