பதிவு செய்த நாள்
21 ஜன2021
11:43

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ் முதன்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. பங்குச்சந்தை துவங்கியதும் 334.61 புள்ளிகள் உயர்ந்து, 50,126.73 ஆக வர்த்தமாகியது. நிப்டியும் 93.60 புள்ளிகள் உயர்த்து, 14,738.30 ஆக வர்த்தகமாகியது.
ரிலையன்ஸ் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் ஆகியவை மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்ச லாபம் ஈட்டியுள்ளன. தேசிய பங்குச்சந்தையில், டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்று உள்ளது மற்றும் கொரோனா தொற்றுக்கு பிந்தைய உலக பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளாதார மீட்சி உதவும் என்ற எதிர்பார்ப்பில் சர்வதேச முதலீட்டாளர்கள் உள்ளதால் உள்நாட்டு சந்தை மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில், கொரோனா தடுப்பூசி இயக்கம் பங்குச்ந்தையை உயர்த்தும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|