பதிவு செய்த நாள்
21 ஜன2021
20:56

புதுடில்லி:ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான, பி.எம்.டபுள்யு., நடப்பு ஆண்டில், இந்தியாவில், 25 புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் நேற்று, ‘பி.எம்.டபிள்யு., – 3 சீரிஸ் கிரான் லிமோசின்’ எனும் புதிய காரை, இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த காரின் விலை, 51.5 – 53.9 லட்சம் ரூபாய் ஆகிறது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில், 25 புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, ‘பி.எம்.டபுள்யு., குழுமம் இந்தியா’ வின் தலைவர் விக்ரம் பவா கூறியதாவது: எங்களை பொறுத்தவரை, கொரோனாவின் பாதிப்புகள் முடிந்துவிட்ட தாகவே கருதுகிறோம். கடந்த ஆண்டில், விற்பனை கணிசமாக குறைந்து விட்டது. இந்த ஆண்டில், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப தேவையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. கொரோனாவை முன்னிட்டு சொந்த வாகனத்தில் செல்வது அதிகரித்து வருவது முதல் காரணம். அடுத்த காரணம் இப்போது வெளிநாடுகளுக்கு பயணம், விடுமுறை சுற்றுலா ஆகியவற்றை பலர் மேற்கொள்ளாததால் அவர்கள் கவனம் ஆடம்பர கார்கள் பக்கம் திரும்பி உள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 25 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|