பதிவு செய்த நாள்
21 ஜன2021
20:58

புதுடில்லி:‘ஸ்கூட்டர்ஸ் இந்தியா’ நிறுவனத்தை மூடிவிடும் முடிவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அரசு, ஸ்கூட்டர்ஸ் இந்தியா மற்றும், ‘பாரத் பம்ப்ஸ் அண்டு கம்ப்ரசர்ஸ்’ ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் மூடிவிட முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக, ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை மூடும் முடிவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட உத்தேச திட்டத்தின்படி, இந்நிறுவனத்தை மூடுவதற்கு தேவையான, 65.12 கோடி ரூபாயை, இந்திய அரசிடம் கடனாக கோரப்பட்டு உள்ளது.நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு, சரியான நபர்கள் அல்லது நிறுவனங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, இந்நிறுவனத்தை மூடிவிடும் முடிவை, ‘முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை’ முன்மொழிந்தது.ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம், 1972ம் ஆண்டில் துவக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. ‘விஜய் சூப்பர், லாம்ப்ரெட்டா, லாம்ப்ரோ’ ஆகிய பெயர்களில் ஸ்கூட்டர்களை தயாரித்து சந்தைப் படுத்தி வருகிறது. மேலும், ‘விக்ரம்’ எனும் பெயரில், மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்தது.நாளடைவில் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாமல், நஷ்டத்தை சந்தித்து, தற்போது முற்றாக மூடப்பட்டுவிடும் நிலைக்கு வந்துவிட்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|