பதிவு செய்த நாள்
21 ஜன2021
21:03

மும்பை:வரலாற்று சாதனையாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்று வர்த்தகத்தின் இடையே, 50 ஆயிரம் புள்ளிகளை முதன் முறையாகத் தாண்டியது.
தேசிய பங்குச் சந்தை
உலக சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், சென்செக்ஸ் இந்த உச்சத்தை தொட்டுள்ளது.வர்த்தகத்தின் இடையே, 50126.73 எனும் உச்சத்தை, சென்செக்ஸ் தொட்டது. இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும், வர்த்தகத்தின் இடையே, 14738.30 புள்ளிகளை முதன் முறையாக தொட்டது.
இருப்பினும், வர்த்தகத்தின் இறுதியில், லாபத்தை எடுப்பதற்காக, அதிகளவில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, சென்செக்ஸ், நிப்டி ஆகியவை உச்சத்திலிருந்து கீழிறங்கி, முடிவுக்கு வந்தன. சென்செக்ஸ், 49624.76 புள்ளிகளிலும், நிப்டி, 14590.35 புள்ளிகளிலும் நிலைபெற்றது.
பொருளாதார வளர்ச்சி
சந்தையின் இந்த எழுச்சி தொடருமா அல்லது சரியுமா என்பது குறித்து, பல்வேறு கருத்துக்கள் சந்தையில் நிலவுகின்றன.அதிகரிக்கும் அன்னிய முதலீடு தொடர்வது, ரூபாய் மதிப்பு அதிகரிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்வது ஆகியவற்றை பொறுத்து, சந்தைகள் இந்த சரித்திர சாதனையை மேலெடுத்து செல்லுமா, இல்லையா என்பது தெரியவரும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|