பதிவு செய்த நாள்
22 ஜன2021
21:52

புதுடில்லி:அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் பரப்பளவு, கொரோனாவுக்குப் பிறகு அதிகரித்திருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டில் உள்ள, ஏழு முக்கிய நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் சராசரி பரப்பளவு அதிகரித்துள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், ஒரு வீட்டின் சராசரி பரப்பளவு, 1,050 சதுர அடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில், 1,150 சதுர அடியாக அதிகரித்துள்ளது. இது, 10 சதவீத உயர்வாகும்.
சராசரி பரப்பளவு
கடந்த, 2016ம் ஆண்டிலிருந்து, வீடுகளின் சராசரி பரப்பளவு, குறைந்து வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டுகளில், வீடுகளின் பரப்பளவு குறைந்து வந்ததற்கு, இரண்டு காரணங்கள் உள்ளன.
தேவை அதிகரிப்பு
முதல் காரணம், விலை சகாயமாகவும்; பராமரிக்க எளிதாகவும் இருக்க வேண்டும் என்ற இளைஞர்களின் மனப்போக்கு.
இரண்டாவது, சிறிய அளவில், குறைந்த விலையில் வீடுகளை கட்டி, வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க முயற்சித்த நிறுவனங்களின் எண்ணம். ஆனால், கடந்த ஆண்டில், கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணி புரியும் நிலை ஏற்பட்டுவிட்டதால், சற்று பெரிதான வீடுகளுக்கான தேவை அதிகரித்து விட்டது.சென்னையை பொறுத்தவரை, சராசரியாக, 9 சதவீத அளவுக்கு வீடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது.
அதிகபட்சம்
கடந்த, 2019ல் சராசரியாக, 1,100 சதுர அடியாக இருந்தது, 2020ல் 1,200 சதுர அடியாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில், 21 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|