பதிவு செய்த நாள்
23 ஜன2021
21:38
புதுடில்லி:கடந்த ஆண்டில், இந்தியாவில்,‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ மாடல் கார்களில், அதிகமாக விற்பனை ஆன கார் என்ற சாதனையை, மாருதி சுசூகி நிறுவனத்தின், சுவிப்ட் கார் படைத்துள்ளது.
கடந்த, 2020ம் ஆண்டில் மட்டும் மொத்தம், 1.61 லட்சம் சுவிப்ட் கார் விற்பனை ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி; அறிமுகம் ஆன, 2005ம் ஆண்டிலிருந்து, 2020ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொத்தம், 23 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர், ஷஷாங் ஸ்ரீவாத்ஸவா கூறியுள்ளதாவது:மாருதி சுவிப்ட் கார், பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில், கடந்த, 15 ஆண்டுகளாக சிறப்பாக விற்பனை ஆகி வருகிறது. கிட்டத்தட்ட, 23 லட்சம் வாடிக்கையாளர்களை அது பெற்றுள்ளது. கடந்த, 2010ல், 5 லட்சம்; 2013ல், 10 லட்சம்; 2016ல், 15 லட்சம் என பல மைல்கற்களை கடந்து வந்துள்ளது.
கடந்த ஆண்டில், கொரோனா தடைகளையும் மீறி, 1.61 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.கிட்டத்தட்ட, 53 சதவீதத்துக்கும் அதிகமான கார்கள், 35 வயதுக்கும் கீழே உள்ள இளைஞர்களால் வாங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|