பதிவு செய்த நாள்
24 ஜன2021
21:54

நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நிதி பாதுகாப்பு தொடர்பான கவலை அதிகரித்திருப்பது என்பதும், அவர்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதும் தெரிய வந்துள்ளது
.தனியார் காப்பீடு நிறுவனமான மேக்ஸ் லைப், நடத்திய ஆய்வில், காப்பீடு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு பின்னணியில், நகர்ப்புற இந்தியர்களின் நிதி பாதுகாப்பு உணர்வு குறைந்து இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முதலீட்டின் நோக்கம், பிள்ளைகள் கல்வி, திருமணம் ஆகியவற்றில் இருந்து, ஓய்வு காலம், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் கொண்டதாக மாறியிருக்கிறது மற்றும் ‘டெர்ம் இன்சூரன்ஸ்’ தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்திருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.
இந்திய அளவில், வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டங்களை விட தெற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக நிதி பாதுகாப்பு உணர்வு கொண்டுள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா சூழலில், சிறிய நகரங்களை விட, பெருநகரங்களில் உள்ளவர்கள் நிதி பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வதாகவும் தெரிய வந்து உள்ளது. தலைநகர் டில்லி, இதில் முதலிடம் வகிக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|