பதிவு செய்த நாள்
27 ஜன2021
06:22
புதுடில்லி: இந்திய பொருளாதாரம், 2021ம் ஆண்டில், 7.3 சதவீத வளர்ச்சியை காணும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது சீனாவின் வளர்ச்சியை விட வேகமானதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த, ‘பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள, ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021’ எனும் அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் பொருளாதாரம், 2021ம் ஆண்டில், 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த 2019ல், 4.7 சதவீத வளர்ச்சி காணப்படினும், கடந்த, 2020ல், கொரோனாவின் தாக்கத்தினால் வளர்ச்சியானது, 9.6 சதவிகிதம் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை மீறி, 2021ல் நல்ல வளர்ச்சி காணப்படும்.
மேலும், 2021ல் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவை விட அதிகமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி, 7.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சீனாவின் வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|