பதிவு செய்த நாள்
30 ஜன2021
21:49

புதுடில்லி:பிரபல மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘மைந்த்ரா’ தன்னுடைய, ‘லோகோ’வை மாற்ற உள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக, நிறுவனம் தன்னுடைய இலச்சினையை மாற்ற முன்வந்து உள்ளது.மும்பையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர், மைந்த்ராவின் லோகோ, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக கூறி, மாநிலத்தின் இணைய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துஉள்ளார்.இதையடுத்தே, மைந்த்ரா நிறுவனம், தன்னுடைய லோகோவை மாற்றிக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
‘அவெஸ்டா’ அறக்கட்டளையை சேர்ந்த, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய சமூக ஆர்வலர் நாஸ் படேல். இவர், கடந்த டிசம்பரில், மைந்த்ராவின், லோகோ குறித்து புகார் அளித்தார்.மேலும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவர் இந்த விஷயத்தை எடுத்துச் சென்றார்.
மும்பை போலீசாரும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக லோகோ இருப்பதாக கருதி, புகாரை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, ‘மைந்த்ரா’ நிறுவனத்தின் அதிகாரிகள், இவ்விவகாரம் குறித்து போலீசாரை சந்தித்து, லோகோவை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தனர்.
தற்போது புதிய, லோகோ தேர்ந்தெடுக்கப்பட்டு, அச்சுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக, மைந்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும், மைந்த்ரா.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|