பதிவு செய்த நாள்
31 ஜன2021
21:22

பங்கு முதலீட்டில் ஆர்வம் அதிகரித்து வருவதும், மாதந்தோறும் 10 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நுழைந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வெளியிட்டுள்ள தகவல் படி, 2020ம் ஆண்டில் 10 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் சேர்ந்து உள்ளனர். மேலும், மாதாந்திர அடிப்படையில் 10 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்து வருவதாக, செபியின் மாதாந்திர செய்தி மடல் தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை, 49 மில்லியன் முதலீட்டாளர்கள் உள்ளனர். இது, 2016ம் ஆண்டு 27 மில்லியனாக இருந்தது.
வேகமான பங்கு பரிவர்த்தனை துவக்கும் வாய்ப்பு, ‘டிஜிட்டல்’ முறையில் பரிவர்த்தனை வசதி ஆகியவை, பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரித்திருப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது.அண்மையில் சென்செக்ஸ், 50 ஆயிரம் புள்ளிகள் எனும் புதிய உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. புதிய முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் சந்தையை அணுக வேண்டும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|