பதிவு செய்த நாள்
09 பிப்2021
03:21

புதுடில்லி : ‘எச்.சி.எல்., டெக்’ நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு, 700 கோடி ரூபாய் அளவிலான, ஒரு முறை போனஸை அறிவித்துள்ளது.
எச்.சி.எல்., டெக் நிறுவனத்தின் வருவாய், 10 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 73 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்ததை முன்னிட்டு, ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம், 1.59 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படும்.இதையடுத்து, ஒவ்வொரு ஊழியரும், 10 நாட்கள் சம்பளத் தொகை அளவுக்கு சிறப்பு போனஸை பெறுவர். நிறுவனத்தில், ஓராண்டு அல்லது அதற்கு மேலாக பணியாற்றி வருபவர்களுக்கு, இந்த போனஸ் வழங்கப்படும் என, நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் மனிதவள துறை தலைவர் அப்பா ராவ் கூறியதாவது: பத்து பில்லியன் டாலர் வருவாய் என்பது, நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல். தொற்று நோய் பரவல் இருந்தபோதிலும், எச்.சி.எல்., குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், வலுவான அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர். இது, நிறுவனத்தின் இத்தகைய வளர்ச்சிக்கு சிறப்பான பங்களித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|