பதிவு செய்த நாள்
09 பிப்2021
03:25

புதுடில்லி : உலகளவில், இந்திய பங்குச் சந்தை, ஏழாவது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், ‘மிட்கேப்’ நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 200 லட்சம் கோடி ரூபாயை எட்டியதை அடுத்து, இந்த இடத்தை இந்திய சந்தை பிடித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 51 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய நிலையில், சந்தை மதிப்பில், உலகளவில் மூன்று இடங்கள் முன்னேறி, ஏழாவது இடத்துக்கு வந்து உள்ளது.இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையானது, கனடா, ஜெர்மனி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் சந்தையை விட, பெரியதாக மாறி உள்ளது.
ஜெர்மனி, எட்டாவது இடத்தில் உள்ளது.மேலும், விரைவில் பிரான்ஸ் சந்தையை பின்னுக்குத் தள்ளி, ஆறாவது இடத்துக்கு முன்னேறிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் மொத்த சந்தை மதிப்பு, 209 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மிகச் சிறப்பாக செயல்படுவதிலும் உலகளவிலான, ‘டாப் 15’ சந்தைகளில், இந்திய பங்குச் சந்தை, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது, இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அன்னிய முதலீட்டை பொறுத்தவரை, இரண்டாம் இடத்தில் இருக்கிறது, இந்திய சந்தை.கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், இதுவரை கிட்டத்தட்ட, 29 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை, இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர், அன்னிய முதலீட்டாளர்கள். பிரேசிலில், 32 ஆயிரத்து, 850 கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
இந்தியா, முதலீட்டுக்கு ஏற்ற சந்தையாக இருப்பதாலும், கொரோனா பாதிப்புகளுக்கு பின், தேவைகள் அதிகரித்து, வேகமாக பொருளாதார மீட்சியடைந்து வருவதாலும், பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|