பதிவு செய்த நாள்
09 பிப்2021
03:26

புதுடில்லி : ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்க நேரிடும் என, கருதப்படுகிறது.
கொரோனா பாதிப்பால், அனைத்து விமான நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும், நடப்பு நிதியாண்டில், 9,500 கோடியிலிருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உயரதி காரி ஒருவர் கூறியதாவது:ஏர் இந்தியா நிறுவனத்தை, ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துடன், 2007ம் ஆண்டில் இணைத்த பின், அதிகபட்சமான இழப்பை, நடப்பு நிதியாண்டில் நிறுவனம் சந்திக்கும் என, எதிர்பார்க்கலாம்.இந்த, 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில், 8,000 கோடி ரொக்க இழப்பாகவும்; 2,000 கோடி ரூபாய் தேய்மானமாகவும் இருக்கும். ஏர் இந்தியாவின் இந்த நஷ்டம், அரசின் பங்கு விலக்கல் திட்டத்தை பாதிக்கக் கூடும். நிறுவனத்தின் மதிப்பீடு குறைவது, அரசின் முயற்சியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக, ஏர் இந்தியாவை விற்கும் முயற்சி காலதாமதமாகக்கூடும்.
கடந்த நிதியாண்டில், ஏர் இந்தியாவின் நஷ்டம், 8,000 கோடி ரூபாயாகும்; அதற்கு முந்தைய நிதியாண்டில், 8,500 கோடி ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|