பதிவு செய்த நாள்
09 பிப்2021
19:03

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில, எக்ஸ்பிரஸ் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உங்கள் பயணத்தை சிறப்பானதாகவும் வசதியானதாகவும் எளிதானதாகவும் மாற்றும் வகையில் ‘பாஸ்டேக்’ சேவையை கோட்டக் மஹிந்திரா வங்கி வழங்குகிறது.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாஸ்டேக் சேவை மூலம் வாகனங்கள் சுங்கச் சாவடிக்கு செல்லும்போது அங்குள்ள ஸ்கேனர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து அதற்கான பணத்தை அவர்களின் வங்கி கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளும். இதன் காரணமாக பணப்பரிமாற்றம் இல்லாமல் சுங்கச் சாவடிகளை வேகமாக கடக்க முடியும்.
இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி வழங்குகிறது. இந்த வங்கி மூலம் பாஸ்டேக் சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாய் கேஷ்பேக் சலுகையை அளிக்கிறது. புதிய பாஸ்டேக் வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் உங்கள் சுங்கச்சாவடி பரிவர்த்தனையின் அடிப்படையில் 500 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும். அது வாடிக்கையாளரின் பாஸ்டேக் வாலட்டில் ஒரு மாத சுங்கச்சாவடி பரிவர்த்தனைக்கு பின் 30 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகையானது அனைத்து பயணிகள் கார்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை கோட்டக் என்இடிசி பாஸ்டேக் என்ற இணையதளம் மூலம் இவ்வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கும் மார்ச் 31-ந்தேதி வரை கிடைக்கிறது. இதை பெறு விரும்புவோர் பல எளியமுறைகளில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். www.kotak.com/fastag என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் அருகில் உள்ள கோட்டக் வங்கி கிளைகளுக்கும் சென்று பெற்றுக் கொள்ளலாம். மேலும் 5676788 என்ற எண்ணுக்கு KTAG என்று எஸ்எம்எஸ் அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். 1860 266 2666 என்ற எண்ணில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து கோட்டக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர் அனுபவ வழங்கல் மற்றும் தயாரிப்புகள் பிரிவுத் தலைவர் புனித் கபூர் கூறுகையில், பாஸ்டேக் போன்ற பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றங்கள், விரைவான போக்குவரத்து மற்றும் எரிபொருளில் சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டு பயணத்தை எளிதாகவும் மன அழுத்தமில்லாமலும் செய்துள்ளது. இப்போது, தடையற்ற பயணத்துடன் கூடுதல் நன்மைகளுடன் கூடிய கோட்டக் என்இடிசி பாஸ்டேக் உங்களின் பயணத்தை சிறப்பானதாக மாற்றுகிறது. உங்களின் எளிதான பயணத்திற்கு கோட்டக் என்இடிசி பாஸ்டேக்கை காட்டிலும் சிறந்தது வேறொன்றும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|