பதிவு செய்த நாள்
09 பிப்2021
20:07

புதுடில்லி: உற்பத்திக்கு ஊக்கத்தொகை என்ற திட்டத்தில் ஏ.சி மற்றும் எல்.இ.டி., துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விரு துறைகளுக்கும் மத்திய அமைச்சரவை ரூ.6,238 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு, செலவின நிதிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் “உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை” என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. தொலைத் தொடர்பு, ஆட்டோமொபைல், மருந்துகள் உள்ளிட்ட 10 முக்கிய உற்பத்தித் துறைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இத்துறைகளின் ஊக்கத்தொகைக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதில் இது ஒரு முக்கிய படியாகும்.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வின் ஒரு பகுதியாகவும் இத்திட்டம் உள்ளது. இது பல துறைகளில் முதலீட்டை ஈர்க்கும், மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அரசு கூறியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு மற்றும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்பவர்களுக்கு, அவர்களின் உற்பத்தி மதிப்பில் 4% முதல் 6% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில் ஏ.சி., மற்றும் எல்.இ.டி., துறைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.6,238 கோடிக்கு செலவின நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் வரைவுக் குறிப்பு வர்த்தக அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அனுமதிக்கு பிறகு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|