பதிவு செய்த நாள்
09 பிப்2021
20:53

புதுடில்லி:எலான் மஸ்க் தலைமையிலான, உலகின் மிகப் பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, ‘டெஸ்லா’ கடந்த ஜனவரி மாதத்தில், மெய்நிகர் நாணயமான, ‘பிட்காய்ன்’ மீது,10 ஆயிரத்து, 950 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், பணம் கொடுப்பதற்கு பதிலாக, பிட்காய்ன் செலுத்தி, டெஸ்லா காரை வாங்கும் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இதையடுத்து, பிட்காய்ன் மதிப்பு மேலும் எழுச்சி காண துவங்கி இருக்கிறது.
அண்மையில், எலான் மஸ்க், பிட்காய்ன் முத்திரையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அத்துடன், ‘டாகிகாய்ன்’ எனும் வேறொரு மெய்நிகர் நாணயம் குறித்த மீம்ஸையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் பிட்காய்ன் மீது கோடிக் கணக்கில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
விரைவில், டெஸ்லா காரை பிட்காய்னை கொடுத்து வாங்க முடியும் என அறிவித்து இருந்தாலும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட அளவில் மட்டுமே அவற்றை பெற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் துவங்கப் பட்டால், இனி பணமாக செலுத்தாமல், பிட்காய்னை செலுத்தியே, டெஸ்லா கார் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் வாங்கிக் கொள்ள முடியும்.
நிறுவனத்தின் பணப்புழக்கத்தை எளிதாக்கி கொள்ளவும், வருவாயை மேலும் பெருக்கிக் கொள்ளவும், தங்களது முதலீட்டுக் கொள்கையை மேம்படுத்தி அமைத்திருப்பதாக, டெஸ்லா தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|