பதிவு செய்த நாள்
09 பிப்2021
20:55

புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வேண்டுமென்றே பாதுகாப்பு தரம் குறைந்த வாகனங்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்வதாகவும்; மன்னிக்க முடியாத இந்த செயலை உடனே நிறுத்துமாறும் மத்திய அரசின் உயரதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த, வாகன பாதுகாப்பு சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக செயலர் கிரிதர் அரமானி இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில், வாகன தயாரிப்பாளர்கள், பாதுகாப்பு தரம் குறைந்தவற்றை வேண்டுமென்றே பயன்படுத்தி, இந்திய மாடல் கார்களின் தரத்தை குறைப்பதாக கூறப்படும் செய்திகள் குறித்து நான் கவலைஅடைந்துள்ளேன். இந்தசெயலை நிறுத்த வேண்டும். இது மன்னிக்க முடியாததாகும்.மிகக் குறைவான உற்பத்தியாளர்கள் மட்டுமே, பாதுகாப்பு மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் விலையுயர்ந்த மாடல் கார்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.
பல தர பரிசோதனைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில், வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களை விட, உள்நாட்டில் விற்கப்படும் கார்களில் பாதுகாப்பு தரம் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|