பதிவு செய்த நாள்
10 பிப்2021
23:05

பெங்களூரு:மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விற்பனை அளவு, டிசம்பர் காலாண்டில், 36 சதவீதம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, ‘யுனிகாமர்ஸ் அண்டு கர்னி’ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் காலாண்டில், தனிநபர் சார்ந்த ஆரோக்கியம், அழகு மற்றும் பராமரிப்பு ஆகியவை சார்ந்த பொருட்கள் அதிக மாக விற்பனை ஆகியுள்ளன.எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை வளர்ச்சி, 12 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 90 சதவீதம் அளவுக்கு, வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு, கொரோனா பரவல் மிக முக்கியமான காரணமாக அமைந்தது. வாடிக்கையாளர்களின், வாங்கும் பழக்கத்தில், மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|