பதிவு செய்த நாள்
10 பிப்2021
23:06

புதுடில்லி:கடந்த ஜனவரி மாதத்தில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில், முதலீடு, 45 சதவீதம் அதிகரித்து, 625 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்ததை அடுத்து, தங்க இ.டி.எப்., முதலீட்டில், மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.தங்க இ.டி.எப்., நிதிகளின் மொத்த மதிப்பு, கடந்த டிசம்பரில், 14 ஆயிரத்து, 174 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜனவரியில், 14 ஆயிரத்து, 481 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, இ.டி.எப்., நிதி கருதப் படுகிறது. இது, தங்கத்தை அடிப்படையாக கொண்ட, பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதியாகும். தங்கத்தில் காகித வடிவில் முதலீடு செய்ய இத்திட்டங்கள் உதவுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த தங்க இ.டி.எப்., திட்டங்களிலிருந்து, 141 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டது. ஆனால், அதன் பின் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|