பதிவு செய்த நாள்
10 பிப்2021
23:07

புதுடில்லி:நடப்பு பிப்ரவரி மாதத்தில், ஒன்றாம் தேதி முதல், எட்டாம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் ஏற்றுமதி, சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,பிப்ரவரி மாதத்தில் மட்டும், 8ம் தேதி வரையிலான காலத்தில், ஏற்றுமதி, 10.3 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 4.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதியும் இந்த மதிப்பீட்டு காலத்தில் அதிகரித்துள்ளது. இறக்குமதி, 0.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்து , 52 ஆயிரத்து, 925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 19.4 சதவீதம் குறைந்து, 4.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை, பொறியியல் பொருட்கள், ரசாயனங்கள் ஆகியவை, அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|