பதிவு செய்த நாள்
10 பிப்2021
23:08

மும்பை:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ் 7 சதவீதமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 7.4 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. அது இப்போது மாற்றப்பட்டு, மைனஸ் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜூன் காலாண்டில், கொரோனாவால், வளர்ச்சி, மைனஸ் 23.9 சதவீதம் எனும் அளவுக்கு சரிந்தது.
ஆனால், இரண்டாவது காலாண்டில் மேம்பட்டு, மைனஸ் 7.5 சதவீதமாக ஆனது.நான்காவது காலாண்டில், வளர்ச்சி, கிட்டத்தட்ட, 2.5 சதவீதமாக உயரும் என்றும் நாங்கள் கருதுகிறோம். இதுவரை வந்திருக்கும் நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் பெரும்பாலானவை, நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|