பதிவு செய்த நாள்
10 பிப்2021
23:10

புதுடில்லி:‘இந்தியா பெஸ்டிசைட்ஸ்’ நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, விண்ணப்பித்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 800 கோடி ரூபாய் திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டின்போது, 100 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 700 கோடி ரூபாய்க்கு நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த, இந்தியா பெஸ்டிசைட்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், உத்தரபிரதேசத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. லக்னோ மற்றும் ஹார்டோய் ஆகிய இடங்களில் இதன் உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளன. உலகளவில், போல்பெட், சினோமொக்ஸானில் போன்ற தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில், டாப் ஐந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|