பதிவு செய்த நாள்
10 பிப்2021
23:13

புதுடில்லி:பங்குச் சந்தை முதலீட்டின், ‘பிதாமகர்’ என போற்றப்படுபவர் வாரன் பபெட், தன்னுடைய 11 வயதிலேயே முதலீட்டை துவங்கியவர்.
இவரைப் போலவே, இப்போது, தென் கொரியாவைச் சேர்ந்த, 12 வயதே ஆன, குவான் ஜூன். இவர், பங்குச் சந்தை முதலீட்டில் வெளுத்து வாங்குகிறார்.கடந்த ஆண்டு இவன் வாங்கிய பங்குகள் மூலமாக, 43 சதவீத வருமானத்தை பெற்றிருக்கிறார்.தன்னுடைய தாயிடமிருந்து ஒரு தொகையை வாங்கி, பங்குச் சந்தை முதலீட்டில், கடந்த ஏப்ரலில் இறங்கி இருக்கிறார்.
அப்போது, கொரிய சந்தை சரிவிலிருந்து மீளத் துவங்கிய நேரம். அந்த சமயத்தில், டிவியில் பேசிய முதலீட்டு ஆலோசகர் ஒருவர், இப்போது விட்டால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது என்று பேசியதால் ஈர்க்கப்பட்டு, சந்தையில் முதலீட்டை துவங்கி இருக்கிறார்.குவான் ஜூனுடைய ரோல் மாடலும் வாரன் பபெட் தான்.
தின வர்த்தகம் எல்லாம் செய்யாமல், 10 முதல் 20 ஆண்டுகள் வரை நீண்ட காலத்துக்கு முதலீட்டை தொடரப் போவதாகவும்; அதுவே அதிக லாபமளிக்கும் என்றும் மிகத் தெளிவாக பேசுகிறார்.தென் கொரிய சந்தையே இப்போது இவரைஆச்சரியமாக பார்க்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|