பதிவு செய்த நாள்
11 பிப்2021
22:24

புதுடில்லி:உலகளவிலான உருக்கு நிறுவனமான, ‘ஆர்செலார் மிட்டல்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஆதித்யா மிட்டல் பொறுப்பேற்க இருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தற்போது தலைமை செயல் அதிகாரியாகவும், நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கும் லட்சுமி மிட்டல், நிர்வாக தலைவராக பொறுப்பேற்கிறார்.ஆதித்யா மிட்டல், லட்சுமி மிட்டலின் மகன் ஆவார். இவர், தற்போது நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஆர்செலார் மிட்டல் நிறுவனத்தை, கடந்த, 1976ம் ஆண்டில் லட்சுமி மிட்டல் நிறுவினார். இதையடுத்து, தற்போது உலகின் மிகப் பெரிய உருக்கு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்து உள்ளது.நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கும் ஆதித்யா மிட்டல், ‘உலகின் மிகப் பெரிய உருக்கு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பது, தனக்கு கிடைத்த கவுரவம்’ என, தெரிவித்துள்ளார்.
மேலும், ‘உலகம் விரைவாக மாறி வருகிறது.இந்த மாற்றம் சவால்களைக் கொண்டு வருகிறது. ஆனால் அவை, ஆர்சலார் மிட்டல் நிறுவனத்துக்கு பல வாய்ப்புகளையும் தருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|