பதிவு செய்த நாள்
12 பிப்2021
22:19
புதுடில்லி,:போலியான, ‘டிஜிட்டல் மோட்டார் இன்ஷூரன்ஸ்’ மோசடி நிறுவனம் ஒன்றின் வலையில் சிக்கி ஏமாந்துவிட வேண்டாம் என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் நேஷனல் மோட்டார் இன்ஷூரன்ஸ் எனும் பெயரில், பெங்களூரிலிருந்து ஒரு நிறுவனம், எந்தவித உரிமமும் பெறாமல்; பதிவும் செய்யாமல், இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்வது தெரிய வந்ததை அடுத்து, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
‘பொதுமக்கள் யாரும் இந்த நிறுவனத்துடன், இன்ஷூரன்ஸ் சம்பந்தமாக எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டிருக்கும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அந்த போலி நிறுவனத்தின் இணையதள முகவரியையும் தெரிவித்து எச்சரித்துள்ளது.போலி நிறுவனத்தின் இணையதள முகவரி: https://dnmins.wixsite.com/dnmins.மின்னஞ்சல்: digital policyservices@gmail.com.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|