கோத்ரேஜ் அறிமுகப்படுத்தும் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள்  கோத்ரேஜ் அறிமுகப்படுத்தும் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள் ...  பொதுத் துறை நிறுவனங்களை வாங்க ரூ.73 ஆயிரம் கோடியை திரட்டும்  ‘வேதாந்தா’ பொதுத் துறை நிறுவனங்களை வாங்க ரூ.73 ஆயிரம் கோடியை திரட்டும் ‘வேதாந்தா’ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜாவா 2.1 அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
15:20

ஜாவா 2.1இன் வருகையை அறிவிக்க, ஜாவா 42, மூன்று வசீகரமான புதிய பைக்குகளை கொண்டு வருகிறது. இந்த மூன்று புதிய வரவுகளும் அதனுடைய எல்லா டீலர்களிடையேயும் கிடைக்கும் என்று கிளாசிக் லெஜண்ட்ஸ் பெருமையுடன் அறிவிக்கிறது. த ஜாவா 42, 2018இல் அது அறிமுகமாகும்போது தொடங்கிய ‘ரெட்ரோ கூல்’ புரட்சியை முன்னெடுத்துச் செல்வதுடன், கிளாசிக் ஸ்போர்ட்ஸ் சாயலையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 1,83,942 ஆகும்.

புது வரவுகளை அறிமுகப்படுத்தி, கிளாசிக் லெஜண்ட்ஸ் – நிர்வாகத் தலைவர், ஆஷிஷ் சிங் ஜோஷி பேசுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதுமே 42 வை தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாகவே பயன்படுத்தி வந்தனர். அதன் மூலம் தூண்டப் பெற்ற நாங்கள் மூன்று புதிய கலர் ஸ்கீம்கள் கொண்ட ‘கிளாசிக் ஸ்போர்ட்ஸ்’ பட்டைகளுடன், அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லேஸ் டயர்களை ஸ்டான்டர்ட் பிட்மென்ட்களாகவும், ப்ளைஸ்க்ரீன், ஹெட்லேம்ப் க்ரில் ஆகியவற்றை உபபாகங்களாவும் சேர்த்துள்ளோம். தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் அனைத்து ஜாவா மற்றும் 42 பிரிவுகளிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் புதிய உபபாகங்களையும் தேர்வு செய்துகொள்ள முடியும்” என்றார்.

செயல்திறன் மேம்பாட்டுக்கு ஈடு செய்யும் விதமாக, இந்த மேட்டார்சைக்கிள் ‘ஸ்போர்ட்டி கிளாசிக்’ வடிவத்தை வெளித்தோற்றத்திலும் பிரதிபலிக்கிறது. ஓரியன் சிவப்பு, சிரியஸ் வெள்ளை மற்றும் ஆல்ஸ்டார் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மேட்டார்சைக்கிள் முழுவதும் நீளவாக்கில் படர்ந்துசெல்லும் சாம்பல் நிற கிளாசிக் ஸ்போர்ட்ஸ் பட்டையானது, 42 தன் டிஎன்ஏவில் கொண்டுள்ள ஸ்போர்ட்டி தன்மையை மேலும் கூட்டுகிறது.

புதிய 42 இந்த மோட்டர்சைக்கிளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 13-ஸ்போக் அலாய் வீல்களிலும் ட்யூப்லெஸ் டயர்களிலும் ஓடுகிறது. வண்டியோட்டுபவரின் சௌகரியத்தை மேலும் அதிகப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட சீட் ஆகும். அனுபவிக்கத்தக்க பயணத்தைத் தரும் வகையில் சீட் வடிவம் மற்றும் குஷன் ஆகியவை மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.

293 சிசி லிக்விட் கூல்ட் அண்ட் ப்யூயல் இஞ்ஜெக்டட் எஞ்சின் 27.33 பிஎஸ் சக்தியையும் 27.02 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் கூடுதலான மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளது. இது எஞ்சினின் கொள்ளளவுத் திறனை அதிகரிக்கும் க்ராஸ் போர்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ள முதல் ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஆகும். மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்துகொள்வதை மேலும் மேம்படுத்த, கிளாசிக் லெஜண்ட்ஸ் ப்ளைஸ்க்ரீன் மற்றும் ஹெட்லேம்ப் க்ரில் ஆகியவற்றைக் கொண்டுவந்துள்ளது. இவை எல்லா டீலர்களிடமும் தனியே கிடைக்கும். 42வில் ஸ்டான்டர்ட் ஆக வரும் அலாய் வீல்களும் வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய மோட்டார்சைக்கிள்களில் பொருத்திக்கொள்ளும் வகையில் எல்லா டீலர்களிடமும் தனியாக விற்பனைக்குக் கிடைக்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)