இரண்டாவது மாதமாக ஜனவரியிலும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு இரண்டாவது மாதமாக ஜனவரியிலும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு ...  ‘கூ’வில் குவியும் முதலீடு வெளியேறும் சீன நிறுவனம் ‘கூ’வில் குவியும் முதலீடு வெளியேறும் சீன நிறுவனம் ...
ஊடக தளத்தில் விளம்பரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
21:32

மும்பை:இந்தியாவில், ஊடக தளத்தில் விளம்பரங்கள் நடப்பு ஆண்டில், 23 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில், 21.5 சதவீதம் அளவுக்கு விளம்பரங்கள் சரிவை கண்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அதிகரிக்கும் என்கிறது, ‘குரூப் எம்’ நிறுவன ஆய்வு.இந்நிறுவன ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்புகள் காரணமாக, கடந்த ஆண்டில், ஊடக தளங்களில் விளம்பரங்கள் குறைந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் வளர்ச்சி காணும்.இருப்பினும், 2019ம் ஆண்டின் நிலையுடன் ஒப்பிடும்போது, குறைவாகவே இருக்கும்.

2019ல், 83 ஆயிரம் கோடி ரூபாய் ஊடகங்களில் விளம்பரங்களுக்காக செலவு செய்யப்பட்டு இருக்கிறது.கொரோனா தாக்குதல் குறித்த அறிவிப்புகள் வருவதற்கு சில வாரங்களுக்கு முன், 2020ல் விளம்பர செலவு, 91 ஆயிரத்து, 641 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

உலகளவில் விளம்பரங்களுக்காக செலவழிக்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு, 10வது இடத்தை பிடித்தது.இருப்பினும், நடப்பு ஆண்டில், மீண்டும், 9வது இடத்தை இந்தியா பிடிக்க வாய்ப்பு உள்ளது.நடப்பு ஆண்டு விளம்பரங்களில், அச்சு ஊடகத்துக்கான பங்கு, 16 சதவீதமாக தொடரும் என கருதலாம்.டிஜிட்டல் தளத்தின் பங்கு, 40 சதவீதமாக இருக்கும். தொலைக்காட்சியின் பங்கு சற்று குறைந்து, 18 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)