ஊடக தளத்தில் விளம்பரங்கள் ஊடக தளத்தில் விளம்பரங்கள் ...  பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க் ...
‘கூ’வில் குவியும் முதலீடு வெளியேறும் சீன நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
21:34

புதுடில்லி:சமூக ஊடக செயலி யான, டுவிட்டருக்கு மாற்றாக, இந்தியாவில் உருவெடுத்திருக்கும், ‘கூ’ செயலியின் தாய் நிறுவனத்திலிருந்து, சீன முதலீட்டு நிறுவனம் வெளியேறுகிறது. இதனுடைய, 9 சதவீத பங்குகளை, பிற முதலீட்டாளர்கள் வாங்க இருக்கும் நிலையில், சீன நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

‘கூ’ நிறுவனத்தின் தாய் நிறுவனம், ‘பாம்பினேட் டெக்னாலஜிஸ்’ என்பதாகும். இந்நிறுவனத்தில், ஆக்சல் பார்ட்னர்ஸ், 3 ஒன் 4 கேப்பிட்டல், புளூமி வெஞ்சர்ஸ், கலாரி கேப்பிட்டல் ஆகியவை முதலீடு செய்துள்ளன. அத்துடன் சீனாவை சேர்ந்த, உலகளவிலான துணிகர முதலீட்டு நிறுவனமான, ‘ஷன்வே’ நிறுவனமும் பாம்பினேட்டில் முதலீட்டாளராக உள்ளது.

‘ஷன்வே’, ‘பாம்பினேட்’டின் தயாரிப்பான, கேள்வி பதில்களுக்கான, ‘வோக்கல்’ எனும் செயலியில் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில், ‘பாம்பினேட்’ நிறுவனம், அதன் பிரதான வணிகத்தை விட்டுவிட்டு, ‘கூ’ பக்கம் பார்வையை திருப்பியதை அடுத்து, ‘ஷன்வே’ அதிலிருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறது.

‘ஷன்வே’, இந்தியாவில், ‘பாம்பினேட்’ நிறுவனத்தில் மட்டுமின்றி, வேறு பல நிறுவனங்களிலும் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறது.தற்போதைய நிலவரப்படி ‘கூ’ செயலி, இதுவரை கிட்டத்தட்ட, 30 கோடி ரூபாய்க்கும் மேல், முதலீட்டை திரட்டி இருக்கிறது. இச்செயலியை, 30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)