அமேசானை தடை செய்யணும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை அமேசானை தடை செய்யணும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை ...  பெட்ரோல் விலையேற்றம்:  வலி நீங்குமா? பெட்ரோல் விலையேற்றம்: வலி நீங்குமா? ...
ஜி.எஸ்.டி.,யில் புதிய மாற்றம் வரி விகிதங்கள் மாறக்கூடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2021
21:43

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவைகள் வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது. குறிப்பாக, வரி விகிதங்கள் குறித்த அடுக்குகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்குமாறு, இத்துறையினரை, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 12 சதவீத பிரிவையும், 18 சதவீத பிரிவையும் ஒன்றிணைக்கும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, இப்படி ஒரு முயற்சி குறித்த பேச்சுகள் வெளிவந்தன. ஆனால், அது நடைபெறவில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும், இது குறித்த ஆலோசனையில் இறங்கி இருக்கிறது அரசு.

இது சம்பந்தமாக மாநிலங்களின் கருத்துக்களும் கேட்கப்படும்.இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அடுத்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அப்போது இந்த வரி அடுக்குகளின் ஒன்றிணைப்பு குறித்து, கவுன்சில் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

தற்போது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் மற்றும் கூடுதல் வரிகள் என பல அடுக்குகளில், வரி விதிப்புகள் உள்ளன. இவை குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக, பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வருகின்றன.இதனால், 12 சதவீதத்தையும், 18 சதவீதத்தையும் ஒன்றிணைத்து, புதிய வரி விகிதம் அறிவிக்கப்படும்.மேலும், 15வது நிதி ஆணையமும், 12 மற்றும்18 சதவீத பிரிவுகளை ஒன்றிணைக்கும்படி ஆலோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவற்றை ஒன்றிணைத்து, எத்தனை சதவீதமாக முடிவு செய்யப்படும் என்பது தெரிய வில்லை. அது, 14 அல்லது 16 சதவீதமாக மாற்றி அமைக்கப்படலாம். எதுவாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., கவுன்சில் உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்தே, ஒருங்கிணைப்பு நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)