தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ‘ஐநாக்ஸ்’ நிறுவனம் அமைக்கிறது தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ‘ஐநாக்ஸ்’ நிறுவனம் அமைக்கிறது ...  இந்தியா – மொரீஷியஸ் தாராள வர்த்தக ஒப்பந்தம் இந்தியா – மொரீஷியஸ் தாராள வர்த்தக ஒப்பந்தம் ...
மீண்டும் பறக்கும் ‘ஜெட்’ பங்கு விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
02:49

புதுடில்லி : அடுத்த, 4 – 6 மாதங்களில், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் மீண்டும் விமான சேவையை துவக்க உள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, அதன் பங்கு விலை, 5 சதவீதம் அதிகரித்தது.

நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் நெருக்கடி காரணமாக, 2019, ஏப்ரலில் விமான சேவையை நிறுத்தியது. நடவடிக்கைஅத்துடன், திவால் சட்டத்தின் கீழ், கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. இந்நிறுவனத்தை, தொழிலதிபர், முராரி லாலா ஜலான் தலைமையிலான, ஜலான் – கல்ராக் அமைப்பு ஏற்க முன்வந்து உள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நேற்று பரிசீலித்தது. இது குறித்து, முராரி லாலா ஜலான் கூறியதாவது:இந்திய விமான துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும்.

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்த பின், அடுத்த, 4 – 6 மாதங்களில், விமான சேவை துவங்கப்படும். அதிகபட்ச வரம்புதுவக்கத்தில், 25 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் சேவைகள் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த தகவல் வெளியானதை அடுத்து, நேற்று காலை, மும்பை பங்குச் சந்தையில், ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை, 4.98 சதவீதம் உயர்ந்து, 114.95 ரூபாய் என்ற அதிகபட்ச வரம்பை எட்டியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Sundararaman Iyer - Bangalore,United States
23-பிப்-202107:46:33 IST Report Abuse
Sundararaman Iyer Planted news by SEBI to offload unwanted shares. Jet will NEVER fly again.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)