பதிவு செய்த நாள்
27 பிப்2021
20:56

புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ இதுவரை மொத்தம், 20 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், தற்போது, 14 மாடல் கார்களை, 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்து வருகிறது. மாருதி சுசூகி நிறுவனம், முதன் முதலாக, 1987ம் ஆண்டில், ஹங்கேரி நாட்டுக்கு, 500 கார்களை ஏற்றுமதி செய்தது.
அதன்பின், கடந்த 2012 – 13ல், ஏற்றுமதி, 10 லட்சம் கார்கள் என்ற சாதனை எண்ணிக்கையை தொட்டது. இதில், 50 சதவீதத்துக்கும் அதிகமான கார்கள், ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி ஆனது.அடுத்த, எட்டே ஆண்டுகளில், மேலும், 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, மாருதி நிறுவனம் தெரிவித்துஉள்ளதாவது:உலகளாவிய ஆட்டோ மொபைல் வணிகத்தில், இந்தியா, ஒரு முக்கிய நாடாக மாறுவதற்கு முன்பே, கடந்த, 34 ஆண்டுகளாக வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். வாகனங்களின் தரம், பாதுகாப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை உலக நாடுகளின் தரத்துக்கு ஏற்ப இருப்பதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|