பதிவு செய்த நாள்
27 பிப்2021
20:57

புதுடில்லி:ஒரு பக்கம், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில், தொடர்ச்சியாக அதிகரித்து வந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அதற்கு நேர்மாறாக, டீசல் கார்களை விட, பெட்ரோல் கார்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில், இதுவரை விற்பனை ஆன கார்களில், பெட்ரோல் கார்களின் விற்பனை, 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், டீசல் கார்களின் விற்பனை, வெறும், 17 சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த, 2012ம் ஆண்டில், கார்கள் விற்பனையில், டீசல் கார்களின் பங்களிப்பு, 54 சதவீதமாக இருந்தது. இது, படிப்படியாக குறைந்து, தற்போது, இதுவரை இல்லாத வகையில், 17 சதவீதமாக ஆகிவிட்டது.
டீசல் கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைவுக்கு, முக்கியமான காரணங்களில் ஒன்று, பல முன்னணி நிறுவனங்கள், டீசல் கார் தயாரிப்பை கைவிட்டு விட்டது தான்.குறிப்பாக, மாருதி சுசூகி, ரெனோ – நிஸான், போக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள், டீசல் கார் விற்பனையை நிறுத்தியதும், விற்பனை குறைந்து போனதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும், பெட்ரோலுக்கும் டீசலுக்குமான விலை வித்தியாசமும் குறைந்து வருவதால், மக்களும், பெட்ரோல் கார் வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.இத்தகைய காரணங்களால், பெட்ரோல் கார் விற்பனை அதிகரித்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|