பதிவு செய்த நாள்
28 பிப்2021
20:46

மருத்துவ செலவை சமாளிக்க மற்றும் ஏற்கனவே பெற்ற கடனை அடைக்க, இளம் தலைமுறையினர் அதிக கடன் வாங்கும் பழக்கம் கொண்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘டிஜிட்டல்’ கடன் வழங்கும் நிறுவனமான, ’கேஷ்இ’ நடத்திய ஆய்வில், புத்தாயிரமாண்டைச்சேர்ந்த இளம் தலைமுறையினர் மத்தியில் கடன் வாங்குவதில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
வழக்கமாக நுகர்வோர் கடன் வாங்கும் இப்பிரிவினர் கடந்த ஆண்டு, மருத்துவ செலவு மற்றும் கடனை அடைக்க, அதிகம் கடன் வாங்கியுள்ளனர்.கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பணியிழப்பு மற்றும் ஊதியம் குறைப்பால் இந்த மாற்றம் என தெரிகிறது. பொது முடக்கத்திற்கு பிறகு, வீட்டை புதுப்பிக்க கடன் வாங்குவது அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் அதிகம் கடன் வாங்கிய நிலையில், கடந்த ஆண்டு 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் கடன் வாங்குவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐபோன்’ பயனாளிகளை விட ‘ஆண்ட்ராய்டு போன்’ வைத்துள்ளவர்கள் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|