பதிவு செய்த நாள்
28 பிப்2021
20:49

பொதுமக்கள் மத்தியில், காப்பீடு பெறுவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பலரும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பெறுவதை முக்கியமாக கருதுவதாக அண்மை ஆய்வு தெரிவிக்கிறது.
மருத்துவ காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து இருப்பது நல்ல செய்தி என்றாலும், சரியான அளவு மருத்துவ காப்பீட்டை பெறுவதும் அவசியம். முறையாக ஆய்வு செய்து பொருத்தமான பாலிசியை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் மருத்துவ காப்பீடு பெறும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
காப்பீடு தொகை:
மருத்துவ காப்பீட்டின் அளவு போதுமானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், 5 லட்சம் ரூபாய் என்பது போதுமான பாதுகாப்பாக கருதப்பட்டது. ஆனால் மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஐந்தாண்டு கழித்து இந்த தொகை குறைவாக இருக்கலாம். எனவே, அதிக தொகைக்கு காப்பீடு பெறுவது நல்லது.
குடும்ப பாதுகாப்பு:
காப்பீடு பெறும் போது அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிக்க வேண்டும். மொத்த குடும்பத்திற்குமான பாலிசி ஏற்றதா அல்லது ஒவ்வொரு தனிநபருக்கும் தனியே பாலிசி பெறுவது ஏற்றதா என பார்க்க வேண்டும். குடும்ப பாலிசி எனில், உறுப்பினர்களிடையே காப்பீடு தொகை பங்கீடு செய்யப்படும்.
வரம்புகள் என்ன?
நீங்கள் தேர்வு செய்யும் பாலிசிக்கு ஏற்ப அவை சில வரம்புகளை கொண்டிருக்கலாம். உதாரணமாக, குறிப்பிட்ட வகை அறுவை சிகிச்சை செலவுக்கான வரம்பு இருக்கலாம். மேலும், கூட்டாக பணம் செலுத்த வேண்டிய தருணங்களும் இருக்கலாம். இத்தகைய வரம்புகளை அறிந்திருக்க வேண்டும்.
மருத்துவமனைகள்:
ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும், ‘கேஷ்லெஸ்’ பணம் செலுத்தும் வசதிக்கான மருத்துவ மனை வலைப்பின்னலை கொண்டிருக்கும். இத்தகைய பட்டியலில் இருக்கும் மருத்துவ மனைகளை அறிந்திருக்க வேண்டும். காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்வதில், இந்த வசதி முக்கிய அம்சமாக அமைகிறது.
ஒப்பீடு அவசியம்:
காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் திட்டங்கள் மற்றும் அவற்றின் அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நிறுவனத்தின் நன்மதிப்பு, சேவை அளிக்கும் தன்மை மற்றும் ‘கிளைம்’ களை ‘செட்டில்’ செய்யும் விதம் தொடர்பான தகவல்களையும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|