பதிவு செய்த நாள்
02 மார்2021
05:57
சென்னை : ‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள, ‘ஏர்டெல் சேப் பே’ என்ற புதிய வசதியை, ‘ஏர்டெல் பேமென்ட் பேங்க்’ அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, ஏர்டெல் பேமென்ட் பேங்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுபிரட்டா பிஸ்வாஸ் கூறியதாவது:ஏர்டெல் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள, ஏர்டெல் சேப் பே என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். அத்துடன் ஆன்லைன் மோசடி செய்வது தவிர்க்கப்படும். வங்கிச் சேவையை, ஐந்து கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த எண்ணிக்கையை, அடுத்த சில ஆண்டுகளில், 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், ஆண்டுதோறும் வங்கி வருவாய் வளர்ச்சி, 15 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2021 – -22ம் நிதியாண்டிலும், இதே அளவிலான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|