பதிவு செய்த நாள்
02 மார்2021
06:00

மும்பை : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை, 0.10 சதவீதம் குறைத்து, 6.70 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீடு வாங்க, 75 லட்சம் ரூபாய் வரை பெறும் கடனுக்கான வட்டி, 6.70 சதவீதத்தில் இருந்து துவங்குகிறது. 75 லட்சம் முதல், 5 கோடி ரூபாய் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு, 6.75 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் இறுதி வரை இச்சலுகை வழங்கப்படும். அத்துடன், வீட்டு வசதி கடனுக்கு விண்ணப்பிப்போரின், பரிசீலனை கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ‘யோனோ’ செயலியில் கடன் கோரி விண்ணப்பித்தால், வட்டியில் கூடுதலாக, 0.05 சதவீதம் குறைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடப்பு மார்ச், நிதியாண்டின் இறுதி மாதம் என்பதாலும், ஹோலி பண்டிகை வருவதாலும், குடியிருப்பு விற்பனையை ஊக்குவிக்க, எஸ்.பி.ஐ., வட்டி குறைப்பு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|