பதிவு செய்த நாள்
02 மார்2021
06:03
புதுடில்லி : சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, பிப்ரவரியில், 18 சதவீதம் உயர்ந்து, 2லட்சத்து, 97ஆயிரத்து,747 ஆக அதிகரித்துள்ளது; இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 2 லட்சத்து, 53ஆயிரத்து,261 ஆக காணப்பட்டது. இதே காலத்தில், இரு சக்கர வாகன விற்பனை, 21 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து, 35ஆயிரத்து,891லிருந்து, 2 லட்சத்து, 84ஆயிரத்து,581 ஆக அதிகரித்துள்ளது.
உள்நாட்டில், இருசக்கர வாகன விற்பனை, 15 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து,69ஆயிரத்து, 684லிருந்து, 1 லட்சத்து,95ஆயிரத்து,145 ஆக உயர்ந்துள்ளது.மொத்த வாகன விற்பனை, 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 82ஆயிரத்து, 877லிருந்து, 1 லட்சத்து, ஆயிரத்து, 789ஆக அதிகரித்துள்ளதாக, டி.வி.எஸ்., மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|