கட்டுக்கடங்காமல் 'காப்பர்' விலை: தொழில் முனைவோர்  கவலைகட்டுக்கடங்காமல் 'காப்பர்' விலை: தொழில் முனைவோர் கவலை ...  பெரும் பணக்காரர்கள் பட்டியல் இந்தியாவில் புதிதாக 40 பேர் பெரும் பணக்காரர்கள் பட்டியல் இந்தியாவில் புதிதாக 40 பேர் ...
முத்தான மூன்று திட்டங்களால் முன்னேறலாம்: அழைக்கிறது தொழில் மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
09:40

நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்களை, கோவை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது. சுயதொழில் துவங்குவதற்கு மூன்று பிரதான சுயதொழில் கடன் திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


'நீட்ஸ்'

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் (நீட்ஸ்), தமிழகத்தில் வசிக்கும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள், 21 முதல், 45 வயது வரை சிறப்பு பிரிவினர் (பொது பிரிவினருக்கு, 35 வயது வரை) உள்ளவர்கள் இதற்கு தகுதியானவர்கள். திட்டத்தில், 5 கோடி ரூபாய் வரை உற்பத்தி (மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் சிவப்பு பிரிவு என வகைப்படுத்தப்பட்டவை தவிர) சேவை தொழில்கள் (டாக்சி, சாதாரண சரக்கு போக்குவரத்து மற்றும் சில வகைகள் தவிர்த்து) ஆரம்பிக்கலாம். இதில், 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக, 50 லட்சம் வரை நிலம், கட்டடம், இயந்திரங்களுக்கு கிடைக்கும். 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் உண்டு.


'உய்ஜிப்'

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (உய்ஜிப்), ஓர் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் வசிக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 45 வயது வரையுள்ள சிறப்பு பிரிவினர் (பொதுப்பிரிவினர், 35 வயது வரை), குடும்ப ஆண்டு வருமானம், 5 லட்சத்துக்கு மிகமால் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வியாபாரம் மற்றும் சேவை தொழிலுக்கு, 5 லட்சம் வரையும், உற்பத்தி தொழிலுக்கு, 15 லட்சம் வரையும் விண்ணப்பிக்கலாம்; 25 சதவீதம் மானியம் உண்டு.


பி.எம்.இ.ஜி.பி.!

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (பி.எம்.இ.ஜி.பி.,), 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், உற்பத்தி பிரிவில், 25 லட்சம் வரையும், சேவை பிரிவில், 10 லட்சம் வரையும் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது படிக்காதவர்கள் உற்பத்தி பிரிவில், 10 லட்சம் வரையும், சேவை பிரிவில், 5 லட்சம் வரையும் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில், 35 சதவீதமும், நகர்புறங்களில், 25 சதவீதமும் மானியம் உண்டு.


சிறப்பு 'லோன்மேளா'

இக்கடன் திட்டங்களுக்கான சிறப்பு 'லோன்மேளா' மற்றும் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன. திட்டம் குறித்த விபரங்களுக்கு, 89255 33936/35/32/34 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட தொழில் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ... மேலும்
business news
தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது ... மேலும்
business news
கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் ... மேலும்
business news
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)