‘கெய்ர்ன்’னுக்கு சாதகமாக 5 நாடுகளின் நீதிமன்றங்கள் தீர்ப்பு ‘கெய்ர்ன்’னுக்கு சாதகமாக 5 நாடுகளின் நீதிமன்றங்கள் தீர்ப்பு ...  ‘ஓலா’ ஸ்கூட்டர் ஆலை படங்கள் வெளியீடு ‘ஓலா’ ஸ்கூட்டர் ஆலை படங்கள் வெளியீடு ...
‘கெய்ர்ன்’னுக்கு சாதகமாக 5 நாடுகளின் நீதிமன்றங்கள் தீர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2021
03:18

புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், 5 நாடுகளின் நீதிமன்றங்கள், இந்திய அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கி உள்ளன.

ஏற்கனவே, ‘கெய்ர்ன்’ நிறுவனம், சர்வதேச தீர்ப்பாயத்தில், சாதகமான தீர்ப்பை பெற்றிருக்கும் நிலையில், மேலும், 9 நாடுகளின் நீதிமன்றங்களிலும் முறையிட்டிருந்தது.இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள நீதிமன்றங்களும், கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதுடன், இழப்பீட்டு தொகையான, 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாயை, இந்தியா கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளன.

நடவடிக்கை : இதனையடுத்து, கெய்ர்ன் நிறுவனம், சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், கேமேன் தீவுகள் ஆகியவற்றில், இந்த தீர்ப்பை பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்திய அரசு பணத்தை செலுத்தாத நிலையில், அதற்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளில் இறங்க ஏதுவாக, இந்த பதிவு முயற்சிகளை, கெய்ர்ன் நிறுவனம் மேற்கொள்கிறது.இந்தியா, தீர்ப்பின் படி, தொகையை வழங்கவில்லை எனில், சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்க நேரிடும் என, ஏற்கனவே கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்திருந்தது.

வெளிநாட்டிலிருக்கும் இந்திய அரசின் வங்கி கணக்கு, விமானம், கப்பல் என சொத்துக்களை பறிமுதல் செய்யும் முயற்சியில், கெய்ர்ன் நிறுவனம் இறங்க முடியும் என்கிறார்கள், சட்ட நிபுணர்கள். கெய்ர்ன் நிறுவனத்தின் பங்குதாரர்களில், உலகஅளவிலான நிதி நிறுவனங்களும் உள்ளன. அவை, இந்திய அரசு பணம் தராத பட்சத்தில், அமலாக்க நடவடிக்கைகளில் இறங்க விரும்புகின்றன.முறையீடுஇதற்கிடையே, கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன் மற்றும் உயர் அதிகாரிகள், அண்மையில் நிதியமைச்சக அதிகாரிகளை, மூன்று முறை சந்தித்து பேசிஉள்ளனர்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகு, இவ்விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘வரி விதிப்பது குறித்த விஷயத்தில், இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டால், நான் முறையீடு செய்வேன். அது என் கடமை’’ என்று தெரிவித்திருந்தார். நேரடியான பதிலை தெரிவிக்கவில்லை.இந்தியா, மேல்முறையீட்டு நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ... மேலும்
business news
தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது ... மேலும்
business news
கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் ... மேலும்
business news
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)