பதிவு செய்த நாள்
09 மார்2021
21:59

புதுடில்லி:நாடு, ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, உயர உதவும் வகையில், நிதி நிறுவனங்கள், ஒரு சார்பாக கடன்களை வழங்காமல், தரமான கடன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று, தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்திய வங்கி துறை, கடந்த 1990 கால கட்டத்தில், மோசமான கடன்களை, குறிப்பாக, பெரிய அளவிலான கடன்களை வழங்கி, பிரச்னைகளை சந்தித்தது. தரமான கடன்களை வழங்காமல், வேண்டியவர்களுக்கு கடன் களை வழங்கியதால், வங்கித்துறை அத்தகைய அழுத்தத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொருளாதாரத்தில், தேவையான மூலதன ஒதுக்கீடு நடைபெறுவதை உறுதி செய்வதும், நிதித்துறையின் கடமையாகும். கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில், உயர்தர கடன் வழங்கும் பொறுப்பு இருக்கும் நிலையில், ஒரு சார்பாக கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். வேண்டியவர்களுக்கு கடன் வழங்காமல் இருப்பதை, ஒரு மந்திரமாகவே நிதி நிறுவனங்கள் கருத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|