பதிவு செய்த நாள்
09 மார்2021
22:25

புதுடில்லி:இந்திய அரசு, பணத்தை திருப்பி தராதபட்சத்தில், பறிமுதல் செய்வதற்கான இந்தியாவின் சொத்துக்கள் எவை எவை என்பதை கண்டறிந்துள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த, 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை
மேலும், இந்திய அரசு திருப்பி கொடுக்க வேண்டிய தொகை, வட்டி உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 12 ஆயிரத்து 410 கோடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, 2020ம் ஆண்டிற்கான, வருவாய் குறித்த ஆண்டறிக்கையில், இந்திய அரசுடனான, சமரச பேச்சு வார்த்தைகளால் தீர்வு காணப்படுவதன் மூலமாகவோ, அல்லது, இந்திய அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்வதன் மூலமாகவோ, தொகையை திரும்ப பெற்றுவிடுவதில் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும், கெய்ர்ன் தெரிவித்துள்ளது.சர்வதேச தீர்ப்பாயம்வரி குறித்த விவகாரத்தில், இந்திய அரசு, கெய்ர்ன் நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே, கெய்ர்ன் நிறுவனம் மேலும், 9 நாடுகளின் நீதிமன்றங்களிலும் முறையிட்டிருந்தது. அவற்றில், 5 நாடுகளின் நீதிமன்றங்கள், கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமான சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்று, உறுதி செய்துள்ளன.இந்நிலையில், இதுவரையிலான வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம், 1.7 பில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட, 12 ஆயிரத்து, 410 கோடி ரூபாயை, இந்திய அரசு தர வேண்டும் என, கெய்ர்ன் தெரிவித்து உள்ளது. இந்திய அரசு, மேல்முறையீடு செய்ய உள்ளதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|