பதிவு செய்த நாள்
09 மார்2021
22:29

புதுடில்லி:வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, ‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’, இம்மாதம், 15ம் தேதி, ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்குகளுக்கான விலையை நிர்ணயித்து, நேற்று அறிவித்துள்ளது.
சில்லரை முதலீடுஇந்நிறுவனம், வரும் 15ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டிற்கு வருகிறது. இதன் மூலம், 824 கோடி ரூபாய், நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து, ஒரு பங்கின் விலை, 1,488 – 1490 ரூபாய் என, நிர்ணயித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
புதிய பங்கு வெளியீடு, 15ம் தேதி துவங்கி, 17ம் தேதியன்று முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 150 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 45.21 லட்சம் நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.இதில் பாதியளவு, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும்; 35 சதவீதம், சில்லரை முதலீட்டாளர்களுக்கும்; 15 சதவீதம், நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறது.
கடன்பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடன்களை அடைக்கவும்; பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தவும் திட்டமிட்டுஉள்ளது, இந்நிறுவனம்.கோயம்புத்துாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இந்நிறுவனத்துக்கு, சென்னை, ஸ்ரீபெரும்புதுார், பெங்களூரு, புனே, பரிதாபாத், பிதாம்பூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களிலும் ஆலைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|