பதிவு செய்த நாள்
10 மார்2021
22:51
புதுடில்லி:நாட்டில், அதிக கட்டுமான செலவு கொண்ட நகரமாக, மும்பை உள்ளதாகவும்; குறைவான கட்டுமான செலவு கொண்ட நகரமாக, சென்னை இருப்பதாகவும், ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.‘
ஜே.எல்.எல்., இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் உள்ள, பெரு நகரங்களில், கட்டுமானத்துக்காக ஆகும் சராசரி செலவை ஒப்பிடும்போது, மும்பையில், 10 சதவீதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.அதே சமயம், சென்னை மற்றும் ஐதராபாதில், கட்டுமான செலவு, மும்பையை விட, 14 சதவீதம் குறைவாக இருக்கிறது.
மும்பையில், மிக உயரமான, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான, சராசரி கட்டுமான செலவு, ஒரு சதுர அடிக்கு, 5,625 ரூபாய் ஆகிறது. இதுவே, வர்த்தக கட்டடங்களுக்கான செலவு, 1 சதுர அடிக்கு, சராசரியாக, 3,875 ரூபாய் ஆகிறது.
கட்டுமான செலவுகள் அதிகரித்திருப்பதற்கு, கட்டுமான பொருட்களின் தேவை அதிகரித்திருப்பதும், அவற்றின் வினியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகளுமே முக்கிய காரணங்களாக உள்ளன. வினியோக பிரச்னைகள் சரியான பின், விலை, இயல்புக்கு திரும்பும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|