பதிவு செய்த நாள்
14 மார்2021
21:22

தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், தங்க இ.டி.எப்., திட்டங்களில் கடந்த பிப்ரவரி மாதம், முதலீட்டாளர்கள், 491 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்றாக தங்க இ.டி.எப்., காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வ தற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இவை பங்குச் சந்தையில், பரிவர்த்தனை செய்யப்படும் வகையை சேர்ந்தவை.இந்நிலையில், தங்க இ.டி.எப்., நிதிகளில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிப்ரவரி மாதம், இந்த நிதிகளில், 491 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது; ஜனவரி மாதம், 635 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டது.தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மிகுந்த முதிர்ச்சியுடன் செயல்பட்டு, இந்த வகை நிதிகளில் முதலீடு செய்து வருவதாக கருதப்படுகிறது.
சர்வதேச சந்தை போக்கு, உள்நாட்டில் சுங்க வரி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது.முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடு தொகுப்பை பரவலாக்கி கொள்ள விரும்புவதால், தங்க இ.டி.எப்., முதலீட்டின் மீதான ஆர்வம் தொடரும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|