பதிவு செய்த நாள்
16 மார்2021
20:40

புதுடில்லி:கடந்த வார இறுதியில், ‘பிட்காய்ன்’ விலை, புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது, அதிலிருந்து சரிவைக் கண்டுள்ளது. இதற்கு, இந்தியா, பிட்காய்னை தடை செய்வது குறித்த முடிவை எடுக்க இருப்பது, முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று, பிட்காய்ன் விலை, இதுவரை இல்லாத வகையில், 61 ஆயிரம் டாலரை தாண்டியது. இது, இந்திய மதிப்பில், 44.53 லட்சம் ரூபாய் ஆகும். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், 138.7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான, நிதிச் சலுகை திட்டத்தை வழங்கியதை அடுத்து, இந்த விலை ஏற்றம் நிகழ்ந்தது.ஆனால், திங்கட்கிழமை சரிவைக் கண்டது. அன்றைய தினம் பிட்காய்ன் மதிப்பு, 40.78 லட்சம் ரூபாயாக சரிந்தது.
இது குறித்து, சந்தை நிபுணர் ஒருவர் கூறியதாவது:ஆசியாவில், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, பிட்காய்ன் உள்ளிட்ட, மெய்நிகர் நாணயங்களை தடை செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.இத்தகைய முதலீட்டை வைத்திருப்பது, மேற்கொள்வது, வர்த்தகம் செய்வது, மாற்றுவது என, அனைத்தையும் தடை செய்யும் மசோதாவை கொண்டு வர இருக்கிறது.இதன் காரணமாகவே, பிட்காய்ன் மதிப்பு, உச்சத்திலிருந்து கீழிறங்கியது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|